ஸ்ரீமதே ஶட கோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

வி.கே.என் சேவைகளுக்கு வரவேற்கிறோம்

எங்களை பற்றி

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் திருவஹிந்திரபுரம் ஒன்றாகும். கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரலாற்று கோயில் தேவநாதசுவாமி கோயில் 108 ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலைப் பற்றி ஆழ்வார்கள் எழுதிய நம்மாழ்வாரிடம் இருந்து நாதமுனி சேகரித்த திவ்ய பிரபந்தத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவிலில், பிரதான கடவுளான தேவநாத பெருமாள் மற்றும் ஹேமாம்ப்ஜவல்லி தாயார். பகவான் ஹயக்ரீவ கோயிலும் உள்ளது. இது தேவநாத சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள மலைமீது உள்ளது. தென்னிந்தியாவில் ஹயக்ரீவ கோவில் உள்ள ஒரே வரலாற்று கோயில் இந்த கோயில். அக்ஷராப்யாசம் (ஒரு குழந்தையின் கல்வியைத் தொடங்குவதற்காக நடத்தப்பட்ட விழா) செய்ய பலர் இங்கு வருகிறார்கள்.

இந்த வரலாற்று இடத்தில் நாங்கள் 2003 முதல் எங்கள் சேவைகளை வழங்கி வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்காக தேவநாத சுவாமி தரிசனத்திற்கும் உதவுகிறோம்.

எங்கள் சேவைகள்

பின்வரும் சேவைகள் எங்களால் வழங்கப்படுகின்றன.

சுப நிகழ்ச்சி மண்டபம்கள்

அலர்மேல்மங்கை என்னும் பெயரில் எங்களுக்கு இரண்டு திருமண மண்டபங்கள் திருவஹீந்திரபுரத்தில் உள்ளது. இந்த இரண்டு மண்டபங்களும் தேவநாதசுவாமி கோயிலுக்கு மிக அருகில் உள்ளன. AC & NON-AC வசதியும் உன்டு. வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலம் எங்கள் ஊர் என்பதாலும், எங்கள் சேவையாலும் பெரும்பான்மையான திருமணங்கள், உபநயனங்கள், சீமந்தம், ஷஷ்டியப்தபூர்த்தி (60 வயது திருமணம்), பிறந்த நாள் ... போன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மண்டபம் - 1

  • இது தேரடி தெருவில் உள்ளது.
  • இது தேவநாதசுவாமி கோயிலுக்கு 100 மீட்டர் மற்றும் பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லக்கூடிய தூரம்.
  • இந்த மண்டபத்தில் அதிகமான மக்கள் அமர்ந்து விழா வைபவத்தை காணும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

மண்டபம் - 2

  • இது கருடா (கெடிலம்) நதி தெரு (அ) ஆற்றங்கரை தெருவில் உள்ளது.
  • இது தேவநாதசுவாமி கோயிலுக்கு 50 மீட்டர் மற்றும் பஸ் நிலையத்திற்கு 100 மீட்டர் தூரம்.
  • இந்த மண்டபத்தில் அதிகமான மக்கள் அமர்ந்து விழா வைபவத்தை காணும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

தங்கும் விடுதி

திருவஹிந்திரபுரத்தில் ஆற்றங்கரை தெருவில் சீனிவாசன் என்னும் பெயரில் AC & NON-AC அறைகள் உள்ளன. முதல் (1வது) மாடியில் 7 அறைகள் வாடகைக்கு உள்ளன. அறைகள் மிகவும் சுத்தமாகவும்,மண்டபத்தின் மிக அருகிலேயும் அமந்துள்ளது. அறைகள் தேவநாதசுவாமி கோயிலுக்கு 200 மீட்டர் தூரத்திலும் பஸ் நிலையத்திற்கு நடந்து செல்லக்கூடிய தூரத்திலும் உள்ளன. தரிசனம், அக்ஷராபியாசம், உபநயனம், திருமணங்கள், சாஷ்டியாப்தி பூர்த்தி (60 வயது திருமணம்), பிறந்த நாள் மற்றும் சீமந்தம் ... போன்ற பல விழாக்களுக்கு நாங்கள் வாடகைக்கு அறைகளை வழங்குகிறோம்.

கொலு பொம்மைகள்

நாச்சியார் அவதரித்த நாளை கொண்டாடும் விதமாக தான் நாம் நவராத்திரியை அனுஷ்டிக்கிறோம். நவராத்திரி விழாவில் ஒன்பது நாளும் கொலு பொம்மைகள் வைத்து சேவிப்பது நம் பாரம்பரியத்தில் ஒன்று. பெருமாளும், தாயாரும், ஆழ்வார், ஆச்சார்யர்கள் சம்பந்தமாக கோலு வைப்பது நம் பாரம்பரியம். அடுத்த தலைமுறைக்கு இது வழிகாட்டியாக இருக்கும். குறிப்பாக தமிழநாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிரது.

நம் சம்பிரதாயத்தை பூர்வாச்சார்யர்கல் கஷ்டப்பட்டு வளர்த்தார்கள். அதை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு புரிய வைக்க ஒரு சிறிய முயற்சியாக நாங்கள் இந்த கொலு பொம்மைகலள் தயாரிக்கிறோம். பூர்வாச்சர்யர்களுடய வாழ்க்கை வரலாறு, அவர்கள் ஆச்சார்யர்களிடத்தில் காட்டிய பக்தி, இராமருடைய குணங்கள், கிஷ்ணருடைய லீலைகள்,சரணாகதி என்றால் என்ன என்பதை விளக்கும் பொம்மைகள் போன்ற பலவகைப்பட்ட பொம்மைகள் எங்களிடம் கிடைக்கும்.

உதாரணமாக, நம்பிள்ளை ஈடு

ஸ்ரீரங்கத்தில் நம்பிள்ளை காலஷேபம் சாதிக்கும் போது அதை கேட்பதற்கு ரங்கநாதர் தன்னுடைய சன்ணிதியை விட்டு வெளியே வந்தார், அப்போது திருவிளக்கு பிச்சன் தடுத்து நிறுத்தி ரங்கநாத பெருமானை திரும்பி சயனிக்க சொன்னார் பெருமானும் உடனே சயனித்துக் கொண்டார்.

இதை குழந்தைகளுக்கு புரியும் படியாக பொம்மைகளாக, இந்த மாதிரி சம்பிரதாயத்தில் உள்ள கதைகளை நாங்கள் பொம்மைகளாக செய்திருக்கிறோம். இதை பார்த்து குழந்தைகள் நம் சம்பிரதாயபடி வளர அடியேனின் சிறு முயற்சி.

"பல்வேறு வகையான கோலு பொம்மைகள் மற்றும் பொருட்களின் வகையை நாங்கள் பொம்மைகள் சேகரிப்பு பிரிவில் குறிப்பிட்டுள்ளோம்.”

முக்கிய குறிப்பு :-   P – Paper mesh, C – Clay, B – Big and b – Both(Paper mesh & Clay). Also Mentioned ft – Feet and W – Width.

பொம்மைகள் சேகரிப்பு

கேட்டரிங்

ஒருவரின் வாழ்க்கையில் எந்தவொரு நிகழ்ச்சியிலும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அலர்மேல்மங்கை என்னும் பெயரில் கேட்டரிங் சேவை 2003 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக வளர்ந்தது. திருவஹிந்திரபுரத்தில் (திருவந்தி புரம்) எங்களின் கேட்டரிங் சேவை முறையில் உணவானது சுவையானதாகவும் தரமானதாகவும் சிறப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் முக்கிய நோக்கம் திருமணங்கள், பிறந்த நாள், ஆண்டுவிழாக்கள், உபநயனங்கள், சீமந்தம் மற்றும் அனைத்து வகையான சம்பிரதாய விழாகளுக்கும் ஒரு பாரம்பரிய முறையில் புதுமையான பாணிகளில் தரமான உணவுகளை பூர்த்தி செய்வதாகும். வாடிக்கையாளர் தேவைக்கேற்ப நாங்கள் உணவுகளை வழங்குகிறோம்.

எங்களை தொடர்பு கொள்ள

உரிமையாளர்
K.E.S. VENKATA KRISHNAN​
முகவரி:
131A, Car street,
&
47A, River side street, Thiruvahindrapuram Village, Cuddalore District,Tamil Nadu. pincode: 607401

முக்கிய குறிப்பு : எங்கள் சேவைகளுக்கு நீங்கள் Email (or) Whatsapp வழியாக எங்களை அணுகலாம்.

தமிழ்
Open chat
1
Hi, New Dolls are available. If you want contact me through this whatsapp.